மலேசியாவில் உள்ள செவந்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபைக்காக, மலேசியா யூனியன் மிஷன் (MAUM) புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடனும், திட்டமிட்ட திசையுடனும், எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதால், ஒரு புதிய அத்தியாயம் திறந்து வருகிறது.

ஹார்வெஸ்ட் 2025 இன் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, MAUM தலைவர் பாஸ்டர் ஏபல் பானா அவர்கள், மலேசியா திருச்சபை ஒன்றுபட்டு முன்னேறவும், வேதாகமத்தில் அடிப்படையாக்கொண்டு நிலைத்திருக்கவும், தேவனுடைய பணியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். ஹார்வெஸ்ட் 2025, தெளிவுடனும், இரக்கத்துடனும், அவசர உணர்வுடனும், நித்திய சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய திருச்சபையின் மைய அழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. எண் சார்ந்த இலக்கை மட்டும் அல்லாமல், இந்த முயற்சி கிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தையிலும் உறுதியாக நிலை கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மாற்றம் பெற்ற வாழ்க்கைகளையே வலியுறுத்தியது. ஒன்றுபட்ட ஜெபம், திட்டமிட்ட சீடர்த்துவம், மற்றும் முழுமையான சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம், ஹார்வெஸ்ட் 2025, பணி சிலருக்கே ஒதுக்கப்பட்டதல்ல; அது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒப்படைக்கப்பட்டதாகும் என்பதை உறுப்பினர்களுக்கு நினைவூட்டிகிறது.
திருச்சபை ஒரு புதிய ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் நுழையும் நிலையில், அதன் பார்வை தெற்கு ஆசியா–பசிபிக் பிரிவு (SSD) REAPS பிரச்சாரத்துடன் ஒத்திசைவடைகிறது. இது 2026 முதல் 2030 வரை முன்னேறுவதற்கான ஐந்து ஆண்டுக் கால பணிநோக்க பாதை ஆகும்.REAPS என்பது Reach (அடைதல்), Expand (விரிவுபடுத்தல்), Advance (முன்னேற்றுதல்), Proclaim (அறிவித்தல்), மற்றும் Seek, Save, Disciple (தேடுதல், இரட்சித்தல், சீஷராக்குதல்) என்பவற்றைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துவின் உடனடி வருகைக்காக மக்களைத் தயார்ப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுகிறது.

இந்த ஆண்டின் கவனக்குறிப்பு REAPS-இன் தொடக்க கட்டமான Reach26-க்கு மாறுகிறது. இந்த கட்டம் சமூகங்களுக்கும், சீர்படுத்தப்படாத மக்கள் குழுக்களுக்கும் திட்டமிட்ட மற்றும் தந்திரமான அறிவித்தலை வலியுறுத்துகிறது. சமீப கலந்துரையாடலில், பாஸ்டர் ஏபல், திருச்சபை ஒரு புதிய மிஷன் தளங்களில் முன்னேற ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தினார். இதில், தற்போதைய நிலையில் அட்வென்டிஸ்ட் திருச்சபை எங்கேயும் இல்லாத மலேஷிய தீபகண்டமான தெரெங்கானு பகுதிகள், மற்றும் சீர்படுத்தப்படாத மக்கள் குழுக்கள் உள்ள சாராவாக் மாநிலம் அடங்கும், குறிப்பாக கெலாபிட், காயன் மற்றும் கென்யா சமூகங்கள்.
Reach26 என்பது முழுமையான மற்றும் அனைத்தும் பொருந்தும் இயக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் திட்டம் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியது: டிஜிட்டல் மிஷன், கல்வி, சுகாதார முன்முயற்சிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர் பணிகள், இலக்கிய சுவிசேஷம், பொது சுவிசேஷக் பிரச்சாரங்கள், மனிதாபிமான உதவி, நட்பு மற்றும் உறவியல் சுவிசேஷம், குடும்ப பணிகள், சிறப்பு தேவைகள் பணிகள், மற்றும் முழு உறுப்பினர் பங்களிப்பு (TMI). இந்த முயற்சிகள், GTMI (உலகளாவிய முழு உறுப்பினர் பங்களிப்பு) போன்ற உலகளாவிய முயற்சிகளைப் போலவே, ஒவ்வொரு திருச்சபை உறுப்பினரும் தேவனுடைய பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துகின்றன.

இந்தத் திட்டங்களின் மையத்தில் வலுவான ஆன்மீக அடித்தளம் உள்ளது. 2026-க்கான திருச்சபைக்கு அவர் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்பதைப் பற்றி கேட்கப்பட்டபோது, பாஸ்டர் ஏபல், மைய தூண்டுதல் புனிதமான நம்பிக்கை கிறிஸ்துவே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். “ இதை செய்ய எங்களுக்கான மிகப்பெரிய காரணம் கிறிஸ்துவே,” என்று அவர் கூறினார். அவர் மேலும் விசுவாசிகள் ஒன்றினைந்து, வேறுபாடுகளை புறக்கணித்து, பரிசுத்த ஆவி வழிநடத்தவும், மற்றும் “வீட்டிற்கு விரைவில் செல்லவேண்டும்” என்ற ஆசையுடன் ஊக்கப்படுத்தினார்.
விரும்பத்தகுந்த தலைமை வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் முக்கியக் கவனமாக இருக்கும். குறிப்பாக அடுத்த தலைமுறையை பயிற்றுவித்தல் மற்றும் போதகர்களை அவர்களது மிஷன் பணிக்காக தயார் செய்தல். அதேபோல, பார்வையை கையாளக்கூடிய ஒன்றாக மாற்றும் திறன் மிகவும் முக்கியமானது. “அதை எழுதி வைத்திருப்பது அல்லது கேட்டு முடிவெடுப்பது போதாது,” என்று பாஸ்டர் ஏபல் குறிப்பிட்டார். “நாம் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதில் மனப்பூர்வமாக இருக்க வேண்டும்—எவ்வாறு வாழ்கிறோம், என்ன செய்கிறோம் என்பதில்.” ஏன்றார்.
எதிர்காலத்தை நோக்கி, MAUM ஒருங்கிணைந்த பணியை முன்னுரிமையிடும். துறைகள் மற்றும் திருச்சபைகளுக்கிடையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். தனித்து செயல்படும் முயற்சிகளை ஆதரிக்காது. மிஷன் என்பது செயல்திட்டங்களை நடத்துவது மட்டும் அல்ல; மக்கள் உண்மையாக கிறிஸ்துவை சந்திக்கும் சூழலை உருவாக்குவது. அவருடைய சீஷர்களாக வளர்தல், மற்றும் தங்களது நம்பிக்கையை தினசரி வாழ்க்கையில் வெளிப்படுத்துவதே முக்கியம். இதனால், தலைவர் பாஸ்டர் ஏபல் பானா தெரிவித்தபடி, இந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் சாராவாக் மிஷனை பிரித்து, வடக்கு சாராவாக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கு யூனியன் திட்டமிடுகிறது.
திருச்சபை 2026-க்கு அருகிலும், உள்ளூர் மிஷன்களில் GTMI, Reach26 மற்றும் One Voice 27 போன்ற முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படுவதால், ஒத்துழைப்பு மற்றும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் முயற்சிகளுக்காக மாற்றம் ஏற்படுகிறது. நோக்கத்தில் ஒன்றுபட்டு, கிருபையால் வலிமையடைந்து, மலேசியாவில் உள்ள செவந்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபை முன்னேறுகிறது—வேதாகமத்தில் நிலைத்து, பணிக்கு நிகராக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதுபோல, உலகத்தை கிறிஸ்துவின் உடனடி வருகைக்குத் தயாரிப்பதில், கவனம் செலுத்தியுள்ளது.
ஹேசல் வாண்டா ஜினாஜில்-காரா, MAUM தகவல் துறை மையம்.
ெசீதா அப்பலசாமி மொழிபெயர்த்தார்
15, January 2025, Thursday.